close
Choose your channels

கவின் ஜோடியாக நடிக்கிறாரா நயன்தாரா? கதையே ஒரு மாதிரியா இருக்குதே?

Thursday, May 30, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கவின் மற்றும் நயன்தாரா ஒரே படத்தில் இணைந்து நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இருவரும் ஜோடியாக இந்த படத்தில் நடிக்க இருப்பதாக தற்போது வெளிவந்திருக்கும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகரான கவின் தற்போது ஒரே நேரத்தில் நான்கு படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அவற்றில் ஒன்றுதான் கவின் மற்றும் நயன்தாரா இணைந்து நடிக்கும் படம் என்பதும் தெரிந்தது.

இந்த படத்தை ’லியோ’ உள்பட சில படங்களுக்கு பாடல்கள் எழுதியவரும், லோகேஷ் கனகராஜ் இடம் உதவி இயக்குனராக இருந்த விஷ்ணு எடாவன் என்பவர் இயக்க இருக்கும் நிலையில் இந்த படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் நயன்தாரா முக்கிய கேரக்டரில் நடிப்பார் என்றும் கவின் ஜோடியாக நடிக்க வாய்ப்பு இல்லை என்றும் கூறப்பட்டது. கவினுக்கு 33 வயது தான் ஆகிறது என்ற நிலையில் நயன்தாராவுக்கு 39 வயது ஆவதால் இருவரும் இணைந்து நடித்தால் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி இந்த படத்தின் கதையே ஒரு இளைஞர் தன்னை விட வயது அதிகமான பெண்ணை காதலிப்பதாகவும், அதனால் ஏற்படும் பிரச்சனைகளை அவர் எப்படி சந்திக்கிறார் என்பது தான் என்றும் கூறப்படுகிறது. எனவே இந்த படத்தின் கதைப்படி பார்த்தால் கவின் மற்றும் நயன்தாரா ஜோடியாக நடித்த அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் நடிப்பதற்காக கவின் இதுவரை வாங்காத மிகப்பெரிய அளவில் சம்பளம் வாங்கி இருப்பதாகவும், அதே போல் நயன்தாராவும் வழக்கம் போல் அதிக சம்பளம் பெற்றுள்ளதால் இந்த படத்தின் பட்ஜெட்டும் அதிகமாகும் என்றும் கூறப்படுகிறது.

நடிகர் கவின் ஏற்கனவே நடன இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ’கிஸ்’ நெல்சன் தயாரிப்பில் உருவாகி வரும் ’ப்ளடி பெக்கர்’ மற்றும் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகி வரும் ’மாஸ்க்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
Login to post comment
Cancel
Comment