close
Choose your channels

வெளியில போயிறலாம், ஆனால் உயிரோட போவோமான்னுதான் தெரியல: 'லிப்ட்' டிரைலர்

Friday, September 24, 2021 • தமிழ் Comments

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற கவின் நடித்த ‘லிப்ட்’ திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடிட்யில் வெளியாக உள்ளது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

ஐடி அலுவலகம் ஒன்றில் வேலை பார்க்கும் கவின், ஒரு பணி நிமித்தம் காரணமாக இரவு முழுவதும் அலுவலகத்தில் தங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அப்போது ஏற்படும் திகில் அனுபவங்கள், கவின் மற்றும் அம்ரிதா லிப்டில் செல்லும் போது மாட்டிக் கொள்வது போன்ற திகில் காட்சிகள் இந்த படத்தின் டிரைலரில் அமைந்துள்ளன.

படத்தின் பெரும்பாலான காட்சிகளில் கவின் மற்றும் அமிர்தா ஐயர் ஆகியோர் மட்டுமே இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக திகில் காட்சிகள் பார்வையாளர்களை சீட் நுனிக்கு வர வைக்கும் வகையில் படம் அமைந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அக்டோபர் 1ஆம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக இருக்கும் இந்த படத்தில் வினித் வரப்பிரசாத் என்பவர் இயக்கியுள்ளார். பிரிட்டோ மைக்கேல் இசையில், யுவா ஒளிப்பதிவில் மதன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் கவினுக்கு திருப்புமுனையை கொடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz