close
Choose your channels
aranmanai

'ஜிகர்தண்டா 2' ஹீரோயின் அழகாக இல்லையா? செய்தியாளர் கேள்விக்கு பதிலடி கொடுத்த கார்த்திக் சுப்புராஜ்..!

Saturday, November 18, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ‘ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்த நிலையில் இந்த படத்தின் நாயகி அழகாக இல்லை என்று கூறிய செய்தியாளருக்கு கொடுத்த பதிலடி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்ஜே சூர்யா நடிப்பில் உருவான திரைப்படம் ’ஜிகர்தண்டா 2. இந்த படம் தீபாவளி விருந்தாக சமீபத்தில் வெளியான நிலையில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது என்பதும் வசூலிலும் சக்கை போடு போட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடந்த நிலையில் அதில் ஒரு செய்தியாளர் ’ஜிகர்தண்டா 2’ படத்தின் நாயகி நிமிஷா சஜயன் அழகாக இல்லை என்றாலும் மாஸ்டருக்கு இணையாக நடித்துள்ளார், அவரை எப்படி தேர்வு செய்தீர்கள்? என்று கேட்டார்.

அதற்கு கார்த்திக் சுப்புராஜ் ’அவர் அழகாக இல்லை என்று நீங்கள் எப்படி சொல்லலாம்? எதை வைத்து நீங்கள் அழகை தீர்மானிக்கிறீர்கள்? அழகு என்றால் இப்படித்தான் இருக்கும் என்று நீங்கள் நினைத்திருப்பீர்கள் போல, அதை வைத்து சொல்கிறீர்கள்’ என்று பதிலடி கொடுத்தார். இதனை அடுத்து சக செய்தியாளர்கள் கார்த்திக் சுப்புராஜின் கருத்தை ஆமோதிக்கும் வகையில் கைதட்டினர். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Login to post comment
Cancel
Comment