close
Choose your channels

அஜித், விஜய்க்கு ஆபத்து இல்லை, ஆனால் அவமானம்: பிரபல நடிகை டுவீட்

Saturday, April 18, 2020 • தமிழ் Comments

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதால் மனித இனமே உச்சத்தில் உள்ளது. சமூக வலைதளங்களில் எங்கு பார்த்தாலும் கொரோனா வைரஸால் ஏற்படும் உயிரிழப்பு மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த செய்திகளே அதிகம் வெளி வந்து கொண்டிருக்கிறது

இந்த நிலையில் இந்த கொரோனா பரபரப்பிலும் அஜித் விஜய் ரசிகர்கள் தங்களது சண்டையைத் தொடர்ந்து விடாமல் செய்து கொண்டிருப்பது பலருக்கு எரிச்சலை அளிக்கின்றது. நேற்று அஜித் குறித்த ஒரு நெகட்டிவ் டிரண்டும் அதற்கு அஜித் ரசிகர்கள் கொடுத்த பதிலடி பதிவுகளும் அவர்கள் போடும் சண்டையும் அருவருப்பின் உச்சகட்டமாக இருந்ததாக நடுநிலையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சமூக அவலங்கள் குறித்து அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் தைரியமாக கருத்தைக் கூறி வரும் நடிகை கஸ்தூரி, அஜித்-விஜய் குறித்தும் அவர்களது ரசிகர்கள் குறித்தும் டுவிட் ஒன்றினை பதிவு செய்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது: அஜித்தும் விஜய்யும் எந்த குறையும் இல்லாம நல்லா இருக்கணும். இருப்பாங்க. வெட்டி பயலுங்க சாபத்துனால அவங்களுக்கு ஆபத்து இல்லை; ஆனா அவமானம். ஊரே பத்தி எரியும் போது கூட இவிங்களுக்கு இதான் முக்கியமா? திருந்துங்க பிரதர்ஸ். Ignore negativity. வாழு வாழ விடு என்று பதிவு செய்துள்ளார்.

ஏற்கனவே அஜீத் ரசிகர்கள், நடிகை கஸ்தூரி மீது கடும் கோபத்தில் உள்ள நிலையில் இந்த டுவிட்டால் அவர்கள் மேலும் ஆத்திரமடைந்து அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Get Breaking News Alerts From IndiaGlitz