சர்ஜரி செய்த கருணாகரன் எப்படி உள்ளார்? பிரபல தமிழ் ஹீரோ வெளியிட்ட வீடியோ


Send us your feedback to audioarticles@vaarta.com


தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகர் கருணாகரன் சமீபத்தில் ஏற்பட்ட ஒரு சிறிய விபத்தில் காலில் காயம் ஏற்பட்டது என்பதும் இதற்காக அவர் சிறிய அளவில் ஒரு அறுவை சிகிச்சை செய்து தற்போது ஓய்வு எடுத்து வருகிறார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட கருணாகரன் தற்போது எப்படி இருக்கிறார் என்பது குறித்த வீடியோ ஒன்றை நடிகர் விஷ்ணு விஷால் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ’கண் போன போக்கிலே கால் போகலாமா’ என்ற பாடலை கருணாகரன் ரசித்துக் கேட்டுக் கொண்டிருப்பது போன்றும் அவரது கால் சிகிச்சையில் இருப்பது போன்ற காட்சிகளும் உள்ளன.
இது குறித்து நடிகர் விஷ்ணு விஷால் கூறியபோது ’எனது நண்பர் கருணாகரன் தற்போது சர்ஜரிக்கு பிறகு மிக வேகமாக குணமடைந்து வருகிறார். அவர் பாடல்களை கேட்டு மகிழ்ச்சியுடன் இருக்கிறார் என்று கூறியுள்ளார். அதே நேரத்தில் இந்த காயம் எப்படி ஏற்பட்டது என்ற உண்மையை அவர் கூற மறுக்கிறார் என்றும், அவர் ஏதோ உண்மையை மறைக்கிறார்’ என்று நகைச்சுவையாக கூறியுள்ளார்.
மொத்தத்தில் கருணாகரன் தற்போது வெகு வேகமாக குணமாகி வருகிறார் என்பதும் விரைவில் அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.