close
Choose your channels

'மஹான்' படத்தின் சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட கார்த்திக் சுப்புராஜ்!

Friday, December 3, 2021 • தமிழ் Comments

சியான் விக்ரம் நடித்த ’மஹான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் இந்தப் படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்றை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சியான் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் ஆகியோர் இணைந்து நடித்த திரைப்படம் ’மஹான்’. இந்த படத்தில் வாணிபோஜன், சிம்ரன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் என்பதும், சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகிய இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ள நிலையில் இந்த படத்தின் டப்பிங் பணிகள் முடிவடைந்து விட்டதாகவும், குறிப்பாக விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் ஆகியோர் பகுதிகளின் டப்பிங் பகுதிகள் முடிவடைந்து விட்டதாகவும் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்து, இதுகுறித்த புகைபப்டம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இதனையடுத்து இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz