close
Choose your channels
enpt
nd2

கார்த்திக் சுப்புராஜின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

Saturday, December 7, 2019 • தமிழ் Comments

விஜய் சேதுபதி நடித்த பீட்சா என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அதன்பின்னர் ஜிகர்தண்டா, இறைவி, மெர்க்குரி மற்றும் பேட்ட ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார்.  தற்போது அவர் தனுஷ் நடித்துவரும் சுருளி என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தின் தயாரிப்பில் ’மேயாதமான்’ என்ற திரைப்படம் கடந்த 2017ஆம் ஆண்டு வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவருடைய இன்னொரு நிறுவனமான ஸ்டோன் பெஞ்ச் இண்டி’ என்ற நிறுவனத்தின் முதல் படம் தற்போது தயாராகி வருகிறது 

இந்த படத்தின் டைட்டில் ’அல்லி’ என்று சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை பிரபல இயக்குநர்கள் வெற்றிமாறன் மற்றும் பா ரஞ்சித் ஆகியோர் தங்களது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். சனல்குமார் சசிதரன் என்பவர் இயக்கியுள்ள இந்த படம் இம்மாதம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Get Breaking News Alerts From IndiaGlitz