சூர்யாவின் 'ரெட்ரோ' படத்தின் முக்கிய அப்டேட்.. கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட சூப்பர் தகவல்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ படத்தின் முக்கிய அப்டேட்டை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ள நிலையில் இந்த தகவல் சூர்யா ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளார் ‘ரெட்ரோ’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது விறுவிறுப்பாக தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே இந்த படம் மே ஒன்றாம் தேதி தொழிலாளர் தினத்தில் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் தற்போது தொடங்கியுள்ளது.
அந்த வகையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் வரும் 13ஆம் தேதி வெளியாகும் என்று கார்த்திக் சுப்புராஜ் தனது சமூக வலை தளத்தில் அறிவித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த பாடல் நிச்சயம் சூர்யா ரசிகர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சூர்யா இரட்டை வேடங்களில் நடித்திருப்பதாக கூறப்படும் இந்த படத்தில், பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன், ஜோஜூ ஜார்ஜ் உட்பட பலர் நடித்துள்ளனர். 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டோன் பென்ச் நிறுவனங்களின் தயாரிப்பில், உருவாகியுள்ள இந்த படம் கேங்ஸ்டர் மற்றும் ரொமான்ஸ் பின்னணியை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
A Love Drug dropping from @Music_Santhosh ❤️🔥#KannadiPoove 1st single from #Retro 🌼Our early Valentine’s present, dropping on 13th Feb 💖 #RetroFromMay1 #LoveLaughterWar pic.twitter.com/eYsntg8s8U
— karthik subbaraj (@karthiksubbaraj) February 11, 2025
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments