close
Choose your channels
siren
lal_salaam

வியூகம் போட்டதே நான் தாண்டா.. 'அதர்வா' படத்தின் டீசர்..!

Tuesday, March 28, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் கார்த்திக் ராஜூ நடிப்பில் உருவான ’அதர்வா’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என்று கூறப்படும் நிலையில் தற்போது இந்த படத்தின் டீசர் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது

கார்த்திக் ராஜு, சிம்ரன் சவுத்ரி, ஆர்யா, அரவிந்த் கிருஷ்ணா, கபீர் சிங், ஜி மாரிமுத்து உள்பட பலரது நடிப்பில் உருவான இந்த படத்தை மகேஷ் ரெட்டி இயக்கி உள்ளார். ஸ்ரீ சரண் இசையில், சரன்மாதவ் நேனி ஒளிப்பதிவில் உத்தவ் படத்தொகுப்பில் உருவாகிய இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.,

மர்மமான கொலைகள் அடுத்தடுத்து நடந்து வரும் நிலையில் இந்த கொலையை செய்தது யார் என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டு வரும் நிலையில் கொலையாளி கண்டுபிடிக்கப்படும்போது அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்படுகிறது. வியூகம் போட்டதே நான் தாண்டா.. என்ற ஹீரோவின் வசனத்துடன் இந்த டீசர் முடிவடைகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.