close
Choose your channels
DJ

4 பேருக்கு நல்லது பண்ணினாலும் 40 ஆயிரம் பேருக்கு தெரியற மாதிரி பண்ணனும்: 'சர்தார்' டிரைலர்

Friday, October 14, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கார்த்தி நடித்த ‘சர்தார்’ திரைப்படம் வரும் தீபாவளி முதல் ரிலீஸாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இரண்டு நிமிடங்களுக்கு மேல் ஓடும் இந்த டிரைலரில் இரண்டு வித்தியாசமான கேரக்டரில் நடித்துள்ள கார்த்தியின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள், ராஷி கண்ணாவுடன் ரொமான்ஸ் காட்சிகள் உள்பட ரசிகர்களை கவரும் பல்வேறு காட்சிகள் உள்ளது.

குறிப்பாக வயதான கேரக்டரில் தோன்றும் கார்த்தியின் நடிப்பு மற்றும் ஆக்சன் காட்சிகள் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக உள்ளது. உளவாளி மற்றும் போலீஸ் கேரக்டரில் நடித்துள்ள கார்த்தியின் வித்தியாசமான நடிப்பு மற்றும் பிஎஸ் மித்ரன் அபாரமான திரைக்கதை வசனம் ஆகியவை என்று இந்த படத்தின் பிளஸ்களாக காணப்படுகின்றன.

அதேபோல் ஜீவி பிரகாஷின் பின்னணி இசை இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம் ஆகும். ஏற்கனவே ‘இரும்புத்திரை’, ‘ஹீரோ’ ஆகிய இரண்டு வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் பிஎஸ் மித்ரன் அவரது வித்தியாசமான பாணியில் தான் இந்த படத்தையும் உருவாக்கி உள்ளார் என்பது ட்ரெய்லரில் என்று தெரியவருகிறது.

மொத்தத்தில் பொன்னியின் செல்வனை அடுத்து மேலும் ஒரு வெற்றி படம் கார்த்திக்கு வரும் தீபாவளிக்கு காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.