close
Choose your channels

கார்த்தியின் 'சுல்தான்' சென்சார் மற்றும் உறுதி செய்யப்பட்ட ரிலீஸ் தேதி!

Friday, March 26, 2021 • தமிழ் Comments

கார்த்தி நடிப்பில், பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சுல்தான்’. இந்த படம் ஏப்ரல் 2ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு தற்போது புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்படும் என்று செய்திகள் வெளியானதை மறுத்த தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு, ‘சுல்தான்’ திரைப்படம் ஏப்ரல் 2ஆம் தேதி கண்டிப்பாக வெளியாகும் என்று திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் சென்சார் தகவல்கள் வெளிவந்துள்ளன. ‘சுல்தான்’ படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு ’யுஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்று எஸ்ஆர் பிரபுவின் ட்விட்டர் பக்கத்தில் சற்று முன் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பதும் ட்ரெய்லருக்கு பின்னர் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கார்த்தி ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள இந்த படத்தில் நெப்போலியன், லால், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். விவேக்-மெர்வின் இசையமைத்துள்ள இந்த படம் கார்த்தியின் மேலும் ஒரு வெற்றிப்படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Get Breaking News Alerts From IndiaGlitz