டில்லி ரிட்டர்ன்ஸ்... 'கைதி 2' படத்தை உறுதி செய்த கார்த்தி.. 'ஜனநாயகன்' படத்துடன் கனெக்ஷனா?


Send us your feedback to audioarticles@vaarta.com


கார்த்தி நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான 'கைதி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், அந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பை ரசிகர்கள் சில ஆண்டுகளாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
கார்த்தி மற்றும் லோகேஷ் கனகராஜ் அடுத்தடுத்து அளித்த பேட்டிகளில், "கூலி" படம் முடிந்தவுடன் கைதி 2" ஆரம்பிக்கப்படும் என்றும் கூறி வந்தனர். ஆனால், சிலர் ’கைதி 2" படம் 2026 ஆம் ஆண்டு தள்ளிப் போவதாகவும், அதற்கு முன் லோகேஷ் கனகராஜ் இன்னொரு படத்தை இயக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில், இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கார்த்தி தனது சமூக வலைத்தளத்தில் "டில்லி ரிட்டர்ன்ஸ்! லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு இன்னொரு அருமையான ஆண்டு தொடங்குகிறது" என்று பதிவு செய்துள்ளார். மேலும், லோகேஷ் கனகராஜ் உடன் கார்த்தி மற்றும் ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் எஸ்.ஆர். பிரபு இணைந்து இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
மேலும், "ஜனநாயகன்" படத்தை தயாரிக்கும் KVN புரடொக்சன்ஸ் நிறுவனத்தின் எக்ஸ் பக்கமும் டேக் செய்யப்பட்டுள்ள நிலையில், இரு நிறுவனங்களும் இணைந்து இந்த படத்தை தயாரிக்க இருப்பதாக தெரிகிறது.
இந்த பதிவுக்கு ஏராளமான ரசிகர்கள் "டில்லியை மீண்டும் திரையில் பார்க்க காத்திருக்கிறோம்" என்று கருத்து தெரிவித்துள்ளனர். இத்தகவல்களின் அடிப்படையில், லோகேஷ் கனகராஜின் அடுத்த படம் "கைதி 2" என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
DILLI RETURNS
— Karthi (@Karthi_Offl) March 15, 2025
Let it be another fantastic year @Dir_Lokesh@DreamWarriorpic @KvnProductions pic.twitter.com/sLLkQzT0re
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com