close
Choose your channels
anabel
friendship

விமான பைலட் ஆகிறார் கார்த்தி

Tuesday, March 22, 2016 • தமிழ் Comments

'பருத்திவீரன்' படத்தில் அறிமுகமாகி தற்போது நடிகர் சங்க பொருளாளராக இருக்கும் கார்த்தி, விரைவில் விமானம் ஓட்டும் பைலட் ஆக மாறவிருக்கின்றார். ஆம் , கார்த்தி நடிக்கவுள்ள அடுத்த படத்தில் அவருக்கு பைலட் கேரக்டர்தான்.


'ஓகே கண்மணி' படத்தை அடுத்து மணிரத்னம் இயக்கவுள்ள அடுத்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் கார்த்தி, மற்றும் சாய்பல்லவி ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் இந்த படத்தில் கார்த்தி விமானம் ஓட்டும் பைலட் கேரக்டரிலும், சாய்பல்லவி டாக்டர் கேரக்டரிலும் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகும் இந்த படத்தின் மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகவுள்ளதாகவும், கார்த்தியின் 'காஷ்மோரா' படப்பிடிப்பு முடிந்ததும் இந்த படத்தின் படப்பிடிப்ப்பு ஆரம்பமாகும் என்றும் கூறப்படுகிறது.

Get Breaking News Alerts From IndiaGlitz