close
Choose your channels
Viruman
Laal

கார்த்தி-விஜய்சேதுபதி படத்தின் டைட்டில் இந்த நாட்டின் பெயரா?

Monday, June 27, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் கார்த்தி நடித்த ’விருமன், ‘பொன்னியின் செல்வன்’ மற்றும் ’சர்தார்’ திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக உள்ள நிலையில் அவருடைய அடுத்த படத்தின் தகவல்கள் கசிந்துள்ளன.

முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்த ’விருமன்’, மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடித்த ’பொனியின் செல்வன்’, பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்த ’சர்தார்’ ஆகிய திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகவுள்ள்து.

இந்த நிலையில் கார்த்தி நடிக்கவிருக்கும் 24வது திரைப்படத்தை இயக்குனர் ராஜூ முருகன் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே ’ஜோக்கர்’, ‘குக்கூ’ மற்றும் ’ஜிப்ஸி’ ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்.ஆர்.பிரபுவின் ட்ரீம் வாரியர் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த திரைப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். அதுமட்டுமின்றி இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் இந்த படத்திற்கு ’ஜப்பான்’ என்ற டைட்டில் வைக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. வரும் ஜூலை மாதம் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் அடுத்த ஆண்டு தீபாவளி தினத்தில் இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.