close
Choose your channels
naaney_varuven
Ponniyin_Selvan
Buffoonn

கார்த்தியுடன் மலேஷியா சென்ற அதிதிஷங்கர்: ஸ்டைலிஷ் புகைப்படங்கள்!

Sunday, August 7, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் கார்த்தியுடன் நடிகை அதிதிஷங்கர் மலேசியா சென்ற புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான கார்த்தி நடித்த ‘விருமன்’ திரைப்படம் வரும் 12ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன என்பதும் சமீபத்தில் மதுரையில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படம் கிராமத்து கதையம்சம் கொண்ட தாக இருந்தாலும் உலகம் முழுவதும் புரமோஷன் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அந்த வகையில் தற்போது கார்த்தி, அதிதிஷங்கர் உள்பட படக்குழுவினர் புரமோஷனுக்காக மலேசியா சென்று உள்ளனர்.

மலேசியாவில் எடுக்கப்பட்ட கார்த்தி, அதிதிஷங்கரின் ஸ்டைலிஷ் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. மலேசியா மட்டுமின்றி இன்னும் சில நாடுகளிலும் இந்த படத்தின் புரமோஷனுக்கு படக்குழுவினர் செல்லவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.