close
Choose your channels
cred

பிரபல வீராங்கனையின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்

Monday, June 1, 2020 • தமிழ் Comments

விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் கடந்த சில ஆண்டுகளாக உருவாக்கப்படுவதும், அவை நல்ல வரவேற்பை பெற்று வருவதும் தெரிந்ததே. எம்எஸ் தோனி, சச்சின் டெண்டுல்கர், மேரிகோம், மிகா சிங் உள்பட பல விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் திரைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வெற்றியைப் பெற்றது.

இந்த நிலையில் தற்போது இந்தியாவின் பளூதூக்கும் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரி வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை தயாரிக்க கோனா பிலிம் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் முன்வந்துள்ளது. இன்று கர்ணம் மல்லேஸ்வரியின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள கோனா பிலிம் நிறுவனம், இந்த படம் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. கர்ணம் மல்லேஸ்வரி கேரக்டரில் நடிக்கும் நடிகையின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் இந்த படத்தை சஞ்சனா ரெட்டி இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்தியாவுக்காக முதல்முதலில் ஒலிம்பிக்கில் தங்கம் பெற்ற கர்ணம் மல்லேஸ்வரி கடந்த 1993, 1994ஆம் ஆண்டுகளில் உலக சாம்பியன் பட்டத்தையும் வென்றவர். கடந்த 1997ஆம் ஆண்டு சக குத்துச்சண்டை வீரர் ராஜேஷ் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட கர்ணம் மல்லேஸ்வரிக்கு 2001 ஆம் ஆண்டில் மகன் பிறந்தார். கடந்த 2004ம் ஆண்டு அவர் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Get Breaking News Alerts From IndiaGlitz