close
Choose your channels

திடீரென நிறுத்தப்பட்ட பிரபல நடிகரின் திருமணம்: டிவி நடிகை கைதால் பரபரப்பு

Tuesday, September 1, 2020 • தமிழ் Comments

பிரபல டிவி நடிகை ஒருவர் போதைப்பொருள் விற்பனை செய்வதாக எழுந்த குற்றச்சாட்டு காரணமாக கைது செய்யப்பட்டதால், இவரிடம் போதைப்பொருள் வாங்கியதாக கூறப்பட்ட பிரபல நடிகரின் ஒருவரின் திருமணம் நின்று போனது.

கன்னட திரையுலகினர் இடையே போதை பொருள் அதிகமாக நடமாடுவதாக தகவல் வந்ததையடுத்து போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை செய்து வந்தனர். அப்போது அனிகா என்ற டிவி நடிகையை போலீசார் கைது செய்து விசாரணை செய்தபோது அவர் பல நடிகர் நடிகைகள் மற்றும் இசை அமைப்பாளர்களுக்கு போதைப் பொருளை விற்று வந்தது தெரியவந்தது

வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட போதை மருந்துகளை இறக்குமதி செய்து திரையுலகினருக்கு அனிகா விற்பனை செய்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. சமீபத்தில் கூட கன்னட இயக்குனர் இந்திரஜித் என்பவர் இது குறித்து பேட்டியளித்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இந்த நிலையில் பிரபல கன்னட நடிகர் பவன்சவுரியா என்பவர் போதை பொருள் பயன்படுத்துவதாக செய்தி ஒன்று கன்னட திரையுலகில் மிக வேகமாக பரவியது. இவர் அனிகாவிடம் இருந்துதான் போதை மருந்து வாங்கியதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து அவருக்கு நிச்சயம் செய்யப்பட்டிருந்த திருமணம் திடீரென நின்று போனதாகவும் பெண் வீட்டார் இந்த திருமணத்தை நிறுத்திவிட்டதாகவும் கன்னட ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த சில நாட்களாகவே நடிகை கங்கனா ரனாவத் திரையுலகில் போதைப் பொருள் அதிகமாக பயன்படுத்தப்படுவதாகவும், முன்னணி நடிகர்களுக்கு சோதனை செய்தால் பல நடிகர்கள் கம்பி எண்ணுவார்கள் என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Get Breaking News Alerts From IndiaGlitz