close
Choose your channels

ஜெயலலிதா புகைப்படத்திற்கு மரியாதை செலுத்திய 'தலைவி'

Thursday, December 5, 2019 • தமிழ் Comments

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மூன்றாவது நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. சென்னை மெரினாவில் உள்ள அவரது சமாதியில் அதிமுக தலைவர்கள் மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஜெயலலிதா குறித்த ஹேஷ்டேக் டுவிட்டரில் இந்திய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ’தலைவி’ என்ற திரைப்படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் நடித்து வரும் நடிகை கங்கனா ரனாவத் இன்று ஜெயலலிதாவின் நினைவு தினத்தை ஒட்டி அவரது புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இது குறித்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது

இயக்குனர் விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் வரும் 2020ஆம் ஆண்டு ஜூன் 26ம் தேதி தமிழ் ,தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் எம்ஜிஆர் கேரக்டரில் நடிகர் அரவிந்தசாமி நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே

Get Breaking News Alerts From IndiaGlitz