close
Choose your channels
Por
Joshwa

திடீரென ரஜினியை சந்தித்த கங்கனா ரனாவத்.. என்ன காரணம்?

Saturday, November 18, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பாலிவுட் நடிகையும், தமிழில் ‘தலைவி’ ’சந்திரமுகி 2’உள்ளிட்ட படங்களில் நடித்த கங்கனா ரனாவத் இன்று திடீரென சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

மாதவன் மற்றும் கங்கனா ரனாவத் நடிக்கும் திரைப்படத்தை இயக்குனர் ஏஎல் விஜய் இயக்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் பூஜை இன்று சென்னையில் உள்ள தனியார் ஸ்டுடியோவில் நடைபெற்றது

அதே ஸ்டூடியோவில் ரஜினிகாந்த் நடித்து வரும் ’தலைவர் 170 ’படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றதை அடுத்து கங்கனா ஸ்டூடியோவில் படத்தின் குழுவினர் ரஜினியை சந்தித்து ஆசி பெற்றனர். இது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

மேலும் இந்த புகைப்படத்தில் ’தலைவர் 170’ படத்தின் கெட்டப்பில் இருப்பதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். ரஜினியின் கெட்டப் சூப்பராக இருப்பதாகவும் இந்த படமும் ஜெயிலர் படம் போல் வெற்றி அடையும் என்றும் ரஜினி ரசிகர்கள் கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.