close
Choose your channels
RaRa

ஒலிம்பிக் வட்டு எறிதல் இறுதிப்போட்டி: இந்தியாவின் கமல்ப்ரீத் கவுருக்கு பதக்கம் கிடைத்ததா?

Monday, August 2, 2021 • தமிழ் Comments

டோக்கியாவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் கமல் ப்ரீத்கவுர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இதனையடுத்து அவருக்கு பதக்கம் கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கண்டிப்பாக அவர் பெறுவார் என்றும் ஏராளமான நம்பிக்கை தெரிவித்தனர்

இந்த நிலையில் சற்று முன்னர் வட்டு எறிதல் இறுதிப் போட்டி துவங்கியது. முதல் சுற்றில் 61.62 மீட்டர் வட்டு எறிந்த கமல்ப்ரீத் கவுர், இரண்டாவது சுற்றில் தோல்வியடைந்தார். இதனை அடுத்து மழை குறுக்கிட்டதால் சில நிமிடங்கள் போட்டி நிறுத்தப்பட்டது

அதனை அடுத்து மீண்டும் போட்டி தொடங்கிய போது மூன்றாவது சுற்றில் கமல்ப்ரீத் கவுர் 63.70 மீட்டர் என சிறப்பாக செயல்பட்டர். ஆனாலும் இறுதிப்போட்டியின் முடிவுகளின் படி கமல்ப்ரீத் கவுர் அவர்களுக்கு 6வது இடமே கிடைத்தது என்பதால் அவருக்கு பதக்கம் கிடைக்கவில்லை

இருப்பினும் இந்த போட்டியில் மிக சிறப்பாக விளையாடி இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்த கமல்ப்ரீத் கவுருக்கு அனைவரும் வாழ்த்து கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz