close
Choose your channels
naaney_varuven
Ponniyin_Selvan
Buffoonn

அமெரிக்கா செல்லவிருக்கும் டி ராஜேந்தரை சந்தித்த கமல்ஹாசன்: புகைப்படம்

Tuesday, June 14, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகரும் இயக்குநரும் தயாரிப்பாளருமான டி ராஜேந்தர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல இருக்கும் நிலையில் அவரை கமல்ஹாசன் சந்தித்து விரைவில் குணமாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிம்புவின் தந்தையும் இயக்குனருமான டி ராஜேந்தர் திடீரென உடல்நலக்குறைவு காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதயத்திற்கு செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பு இருப்பதாகவும் அது மட்டுமின்றி வயிற்று பகுதியில் ரத்தக்கசிவு இருப்பதாகவும் தெரிய வந்தது.

இதனை அடுத்து டி.ராஜேந்தரை அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்று மேல் சிகிச்சை அளிக்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னால் சிம்பு அமெரிக்கா சென்று சிகிச்சைக்கான ஏற்பாடுகளை செய்த நிலையில் டி ராஜேந்தர் இன்று அமெரிக்கா செல்லவுள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன், டி ராஜேந்தரை நேரில் சந்தித்து அவர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று நலமுடன் திரும்ப வாழ்த்து கூறியுள்ளார். இந்த சந்திப்பின்போது டி ராஜேந்தரின் இளையமகன் குறளரசன் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.