close
Choose your channels
warrior
iravin_nizhal

ரஜினியை திடீரென சந்தித்த கமல்: சட்டமன்ற தேர்தலில் ஆதரவு கேட்கிறாரா?

Saturday, February 20, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் கட்சி தொடங்கி தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவார் என்றும் அவர் ஆன்மீக ஆட்சியை தமிழகத்தில் நடத்துவார் என்றும் அவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

ஆனால் சமீபத்தில் அவர் தனது உடல்நிலையை காரணம் காட்டி அரசியலுக்கு வரப்போவதில்லை என்றும் அரசியல் கட்சி தொடங்கப் போவது இல்லை என்றும் அறிவித்தார். இந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சி தொடங்கிய கமல்ஹாசன் அவர்கள் தற்போது தேர்தலில் போட்டியிடுவதற்கான அனைத்து பணிகளையும் விறுவிறுப்பாக செய்து வருகிறார். விரைவில் ரஜினியை சந்தித்து தனக்கு ஆதரவு கேட்பேன் என்று பேட்டி ஒன்றில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் உடன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. சட்டமன்ற தேர்தலில் ரஜினியின் ஆதரவை பெறுவதற்காக கமல் ரஜினியை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. தனது 40 ஆண்டு கால நண்பர் கமலுக்கு ரஜினி ஆதரவு கொடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.