close
Choose your channels
NMM
NMM

யாரு விடியலை பாக்க போறாங்கன்னு முடிவு பண்றது நான்: 'விக்ரம்' டிரைலர்

Sunday, May 15, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிய ‘விக்ரம்’ படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த டிரைலரின் ஆரம்பத்தில் ‘காடு என்ற ஒன்று இருந்தால் சிங்கம், புலி, சிறுத்தை ஆகியவை வேட்டைக்கு போகும். மான் உயிரை கையில் பிடித்து கொண்டு இருக்கும். ஆனால் அஸ்தமனம் என்று ஆகிவிட்டால் விடியலை பார்க்கப் போவது யார் என்பதை இயற்கை தான் முடிவு செய்யும். ஆனால் இந்த காட்டில் யார் அஸ்தமனத்தை யார் பார்க்கப் போகிறார்கள் என்பதை முடிவு செய்வது இயற்கை அல்ல, நான்தான்’ என்ற கமல்ஹாசனின் ஆக்ரோஷமான வசனத்துடன் டிரைலர்தொடங்குகிறது.

முழுக்க முழுக்க அதிரடி ஆக்ஷன் காட்சிகள், கமல்ஹாசனின் ஆக்ரோஷமான நடிப்பு, விஜய் சேதுபதியின் அட்டகாசமான வில்லத்தனம், பகத் பாசிலின் ஈடு இணையில்லா நடிப்பு ஆகியவை இந்த படத்தின் ஹைலைட்களாக பார்க்கப்படுகிறது. கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகிய மூவரில் யார் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்கள் என்று பட்டிமன்றமே வைக்கும் அளவுக்கு உள்ளது மூவருடைய நடிப்பு.

அனிருத்தின் பின்னணி இசை, லோகேஷ் கனகராஜ் இயக்கம், கிரிஷ் கங்காதர் ஒளிப்பதிவு, அன்பறிவு ஸ்டண்ட் ஆகிய அனைத்தும் இந்த படத்தின் பிளஸ் பாயிண்டுகள். மொத்தத்தில் ஜூன் 3ஆம் தேதி வெளியாகும் இந்தப் படம் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.