close
Choose your channels
NMM

கமல்ஹாசனின் 'விக்ரம்' சாட்டிலைட், டிஜிட்டல் ரிலீஸ் எப்போது?

Saturday, May 28, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள ‘விக்ரம்’ திரைப்படம் வரும் ஜூன் மூன்றாம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் முன்பதிவுகள் நாளை முதல் தொடங்க இருப்பதை அடுத்து மிகப் பெரிய அளவில் இந்த படம் வசூல் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் இந்தப் படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமையை ஹாட்ஸ்டார் நிறுவனமும் விஜய் டிவி நிறுவனமும் பெற்றுள்ளது என்பது தெரிந்ததே. அஜித், விஜய் உள்பட மாஸ் நடிகர்களின் படங்கள் தற்போது திரையரங்குகளில் ரிலீஸ் ஆன ஒரே மாதத்தில் டிஜிட்டலில் ரிலீஸ் ஆகி கொண்டிருக்கும் நிலையில் கமல்ஹாசன் ‘விக்ரம்’ திரைப்படம் டிஜிட்டலில் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

இந்த படத்தின் அனைத்து மொழிகளின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் ரிலீஸ் உரிமையை ஸ்டார் நிறுவனம் 112 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜூன் தாஸ், ஹரிஷ் உத்தமன், காயத்ரி ஷங்கர், ஷிவானி நாராயணன், ஷான்வி ஸ்ரீவத்சவா, ஜி மாரிமுத்து, ரமேஷ்திலக் உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையில் கிருஷ் கங்காதரன் ஒளிப்பதிவில் ஃபிலோமினா ராஜ் படத்தொகுப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.