close
Choose your channels
warrior
iravin_nizhal

கமல்ஹாசனின் 'விக்ரம்' ரன்னிங் இடம் இவ்வளவு அதிகமா? செம விருந்து காத்திருக்கு!

Monday, May 23, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் வரும் ஜூன் மூன்றாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகத்தில் இந்த படத்தை வெளியிட உள்ள நிலையில் இந்த படத்தின் அனைத்து மாநில ரிலீஸ் உரிமை மற்றும் ஓவர்சீஸ் வியாபார பணிகளும் முடிந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது . அமெரிக்காவில் இந்த படத்தை ஏப்ரல் 2ஆம் தேதி இரவே சிறப்புக் காட்சிகள் திரையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் ‘விக்ரம்’ படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளியாகி உள்ள.து இந்த படத்தின் ரன்னிங் டைம் 173 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 53 நிமிடங்கள் என தகவல் வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஓடும் இந்த படம் கமல்ஹாசன் ரசிகர்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களுக்கும் விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், ஷிவானி நாராயணன் உள்பட பலர் நடித்த இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.