close
Choose your channels
NMM

கமல் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்?

Thursday, October 21, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசனின் பிறந்த நாள் வரும் நவம்பர் 7ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கும் நிலையில் அன்றைய தினம் கமல் ரசிகர்களுக்கு ஒரு எதிர்பாராத சர்ப்ரைஸ் காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஆண்டு நவம்பர் 7-ஆம் தேதி கமல்ஹாசன் பிறந்த நாளில் தான் கமல் நடிக்கும் ’விக்ரம்’ என்ற திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிந்து விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்று கமல்ஹாசனின் பிறந்த நாளான வரும் நவம்பர் 7-ஆம் தேதி வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்த முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த செய்தி உறுதி செய்யப்பட்டால் கமல் பிறந்த நாளில் அவரது ரசிகர்களுக்கு எதிர்பாராத சர்ப்ரைசாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராமன், நரேன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.