close
Choose your channels

2 ஆண்டுகளுக்கு முன் டிராப் ஆன படமா 'கமல்ஹாசன் 233? அப்படின்னா ஏஆர் ரஹ்மான் தான் இசையா?

Thursday, July 13, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடித்து தயாரிக்க இருந்த திரைப்படம் தான் தற்போது எச் வினோத் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’கமல்ஹாசன் 233’ படம் என்று கூறப்படுகிறது.

கடந்த 2000 ஆண்டு உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லைகா மற்றும் ராஜ்கமல் நிறுவனங்களின் தயாரிப்பில் ’தலைவன் இருக்கிறான்’ என்ற திரைப்படம் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

மேலும் இந்த படம் ’தேவர் மகன்’ படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என்றும் இந்த படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. மேலும் விஜய் சேதுபதி, வடிவேலு ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

ஆனால் அதன் பின் இந்த படம் குறித்து எந்தவிதமான தகவலும் வெளியாகவில்லை என்பதால் இந்த படம் டிராப் ஆனதாகவே கருதப்பட்டது. இந்த நிலையில் தற்போது எச் வினோத் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாக இருக்கும் திரைப்படம் ’தலைவன் இருக்கிறான்’ படம் தான் என்று கூறப்படுகிறது.

அப்படியானால் ’தலைவன் இருக்கிறான்’ படத்திற்கு இசையமைக்க ஒப்புக்கொண்ட ஏஆர் ரகுமான் தான் இந்த படத்திற்கும் இசையமைப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.