close
Choose your channels

தீபாவளி வாழ்த்தில் 'வன்மம்' குறித்து பேசிய கமல்ஹாசன்: பிக்பாஸ் முதல் புரமோ..!

Sunday, November 12, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக காரசாரமாக சென்று கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பாக பிரதீப் வெளியேற்றம் குறித்து மாயா, பூர்ணிமா குரூப் மற்றும் கமல்ஹாசன் மீது கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது என்பதையும் பார்த்தோம்.

நேற்றைய எபிசோடில் கூட கிட்டத்தட்ட பிரதீப் பேச்சு தான் முழுக்க முழுக்க இருந்தது என்பதும் பிரதீப் வீட்டில் தான் இல்லையே தவிர, அவர் முழுக்க முழுக்க ஒரு கண்டன்ட்டாக உள்ளார் என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் இன்றைய முதல் புரோமோவில் கமல்ஹாசன் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு தனது தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில் அவர் ’எல்லோரும் கொண்டாட கூடிய இந்த நாளை வன்மம் இல்லாமல் சந்தோஷமாக கொண்டாடுங்கள், உங்கள் வாழ்க்கையே கொண்டாட்டமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

இதனை அடுத்து மணி சந்திரா உங்களுக்காக ஒரு தீபாவளி பரிசு வைத்திருக்கிறோம் என்று கூறி கமல்ஹாசன் பெருமையை கொண்டாடும் பாடலுக்கு அனைத்து போட்டியாளர்கள் டான்ஸ் ஆடுகின்றனர். அதை கமல் ரசித்து, ‘சரவெடி கொளுத்தி போட்டு விட்டீர்கள்’ என்று அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததோடு இன்றைய முதல் புரமோ வீடியோ முடிவுக்கு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.