close
Choose your channels
Don
Nenjukku Needhi

கமல்ஹாசன் டிஸ்சார்ஜ்: படப்பிடிப்புக்கு செல்வது எப்போது?

Tuesday, January 18, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் நேற்று சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அதன்பின் அவர் குணமாகி மீண்டும் தனது இயல்பு பணிகளை செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று திடீரென அவர் மீண்டும் போரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் கமல்ஹாசன் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த நிலையில் முழு உடல் பரிசோதனை மேற்கொண்ட பின்னர் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்து கமல்ஹாசன் இன்று காலை 11.30 மணி அளவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் ஓரிரு நாட்கள் ஓய்வு எடுத்த பின்னர் கமலஹாசன் மீண்டும் திங்கட்கிழமை முதல் ‘விக்ரம்’ படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பில் அவர் அடுத்த சில நாட்கள் முழு வீச்சில் ஈடுபடவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.