close
Choose your channels

'கமல் 233' படத்தின் டைட்டில் இதுவா? விரைவில் படப்பிடிப்பு..!

Monday, October 23, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்க இருக்கும் 233 வது படத்தை எச் வினோத் இயக்க இருக்கிறார் என்பதும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் ’தலைவன் இருக்கிறான்’ என்று முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் கமல்ஹாசன் ’தலைவன் இருக்கிறான்’ என்ற டைட்டிலில் ஒரு படத்தை எடுக்க முயற்சித்த போது எதிர்பாராத காரணத்தினால் அந்த படத்தை எடுக்க முடியவில்லை

இந்த நிலையில் அதே கதைக்கு தான் தற்போது இயக்குனர் எச் வினோத் திரைக்கதை எழுதி இயக்க இருக்கிறார் என்றும் அதே டைட்டிலை இந்த படத்திற்கு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் அதிகாரப்பூர்வமாக இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.