close
Choose your channels
Viruman
Laal

பிறந்த நாளில் விஜய்க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கமல்ஹாசன்!

Thursday, June 23, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நேற்று தனது 48வது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பதும், நேற்றைய பிறந்தநாள் மிகச் சிறப்பாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் நேற்று விஜய்யை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் மீது மிகப்பெரிய மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும் விஜய்க்கு இது ஒரு இன்ப அதிர்ச்சியாக இருந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சமீபத்தில் ’விக்ரம்’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் விஜய்யை ’ஐயா’ என்று கமல்ஹாசன் அழைத்ததும் அனைவருக்கும் பெரும் ஆச்சரியத்தை அளித்தது.இது குறித்து கமல்ஹாசன் விளக்கம் அளித்தபோது ’நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் தன்னை ஐயா என்றுதான் அழைப்பார் என்றும் அந்த வகையில் தான் நான் விஜய்யை ஐயா என்று அழைத்தேன் என்றும் விளக்கம் கூறினார்.

மேலும் விஜய்யுடன் பணிபுரிவதற்கு தானும் தன்னுடைய ராஜ்கமல் நிறுவனமும் தயாராக உள்ளது என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார். எனவே விரைவில் விரைவில் கமல்ஹாசனுடன் விஜய் இணையும் படம் குறித்து அறிவிப்பு வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.