கமல்ஹாசன் ஒருநாள் ஜனாதிபதி ஆவார்: பிரபல நடிகர்
உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் பிறந்த நாள் இன்று மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. நடிகர் கமல்ஹாசனின் பிறந்த நாள் விழாவில் அவரது ஒட்டுமொத்த குடும்பத்தினரும் மற்றும் திரையுலகினர் கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகனும் நடிகருமான பிரபு, நடிகர் கமல்ஹாசனின் பிறந்த நாள் விழாவில் பேசிய போது ’எனது திரையுலக வாரிசு கமல் மட்டும்தான் என தனது தந்தை சிவாஜிகணேசன் கூறியதாக தெரிவித்தார். அதுமட்டுமன்றி கமல்ஹாசன் ஒரு நாள் ஜனாதிபதி ஆவார் என்றும் அனைவரும் ஜனாதிபதியாக கமலஹாசனை பார்ப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.
கமலஹாசன் அரசியல் கட்சி ஆரம்பித்து அவர் தமிழகத்தின் முதல்வர் ஆவார் என்று அவரது கட்சியின் தொண்டர்களும் ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் நடிகர் கமலஹாசன் ஜனாதிபதி ஆவார் என்று பிரபு கூறியிருப்பது அவரது ரசிகர்களுக்கு ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது.