close
Choose your channels
Don
Nenjukku Needhi

போட்டியாளர்கள் அனைவருக்கும் ஒரே ஒரு அறிவுரையை கண்டிப்புடன் கூறிய கமல்!

Saturday, January 1, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

போட்டியாளர்கள் அனைவருக்கும் கண்டிப்புடன் கமல்ஹாசன் கூறிய அறிவுரை சற்றுமுன் புரமோ வீடியோவில் வெளியாகி உள்ளது

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நடந்த டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கில் அமீர் வெற்றி பெற்றார் என்பதும் முதல் நபராக நிரூப் டார்கெட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் கமல் இதுகுறித்து நிரூப்பிடம், ‘உங்களை டார்கெட் செய்து வெளியேற்றியது யார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? என்று கேட்டபோது அவர் ’பிரியங்கா’ என்று கூறினார். அனைவரும் தந்திரத்துடன் விளையாடுகிறார்கள் என்றும் அணி அணியாக விளையாடினர் என்றும் நிரூப் குற்றஞ்சாட்டினார். மேலும் தாமரைக்கும் யாரும் சப்போர்ட் செய்யவில்லை என்றும் பாவனிக்கும் யாரும் சப்போர்ட் செய்யவில்லை என்றும் கூறினார்.

அப்போது தாமரை ’ராஜூவும் பாவனியும் டாஸ்க் விளையாடிக் கொண்டிருந்தபோது அமீர் பாவனியின் முட்டையை உடைக்கவில்லை என குற்றஞ்சாட்ட, அப்போது அமீர், ‘நீங்கள் ஏன் ராஜூவின் முட்டையை உடைக்கவில்லை’ என்று எதிர்க்கேள்வி கேட்க அந்த இடமே பரபரப்புக்கு உள்ளானது.

அப்போது குறுக்கிட்ட கமல்ஹாசன் ’நான் ஒரே ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன், தனித்து விளையாடுங்கள்’ என்று சற்று கண்டிப்புடன் அறிவுரை கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.