ரம்யா, ஷிவானிக்கு விழுந்த ஓட்டுகள் கூட கமலுக்கு கிடைக்காது: அதிமுக பிரமுகர்!
பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்திய கமல்ஹாசனுக்கு வரும் தேர்தலில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரம்யா பாண்டியன், ஷிவானி நாராயணனுக்கு விழுந்த ஓட்டுகள் கூட கிடைக்காது என்று அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் அவர்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த நான்கு வருடங்களாக கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார் என்பதும், இதற்காக இவருக்கு கோடிக்கணக்கில் சம்பளம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி பிக்பாஸ் மூலம் கிடைத்த புகழின் அடிப்படையில் அதனை அவர் அரசியல் ரீதியாகவும் பயன்படுத்தி வருகிறார். பிக்பாஸ் இடையிடையே நேரடியாகவும், மறைமுகமாகவும் அரசியல் பேசும் அவர் தனது கட்சியின் கருத்துக்களையும் அவ்வப்போது புகுத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் வரும் தேர்தலில் கமல்ஹாசனுக்கு அதிக வாக்குகள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது
இந்த நிலையில் அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச் செல்வன் அவர்கள் கூறியபோது பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்துகொண்ட ரம்யா பாண்டியன், ஷிவானி நாராயணன் ஆகியோர்களுக்கு கிடைத்த ஓட்டுகள் கூட கமலஹாசனுக்கு வரும் தேர்தலில் கிடைக்காது. ரம்யா பாண்டியனுக்கு நானே நான்கைந்து முறை ஓட்டுகள் போட்டேன் என்று கூறியுள்ளார். அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வனின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது