பிக்பாஸ் போட்டியாளர்களின் முழு விபரங்கள்

பிக்பாஸ் போட்டியாளர்களின் முழு விபரங்கள்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி நேற்றுமுதல் தொடங்கியுள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த நிகழ்ச்சியில் நேற்று மொத்தம் 16 போட்டியாளர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். சுமார் 4 மணி நேரம் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் யார் யார் என்பது குறித்து தற்போது பார்ப்போம்

யாஷிகா ஆனந்த்

யாஷிகா ஆனந்த்

'இருட்டு அறையில் முரட்டு குத்து' படம் மூலம் புகழ் பெற்ற இவர் இந்த நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்

பொன்னம்பலம்

பொன்னம்பலம்

ஸ்டண்ட் நடிகரான இவர் இந்த நிகழ்ச்சியின் 2வது போட்டியாளர்

மகத்

மகத்

வெங்கட்பிரபு இயக்கும் படங்களில் நடிக்கும் அவரது ஆஸ்தான நடிகர்

டேனி

டேனி

காமெடி நடிகரான இவர் 'இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தில் இடம்பெற்ற ஒரு வசனம் மூலம் புகழ் பெற்றவர்

வைஷ்ணவி

வைஷ்ணவி

பிரபல எழுத்தாளர் சாவியின் பேத்தியான இவர் ரேடியோ ஜாக்கியாக உள்ளார்.

ஜனனி ஐயர்

ஜனனி ஐயர்

'அவன் இவன்' உள்பட பல படங்களில் நடித்த நடிகை

அனந்த் வைத்தியநாதன்

அனந்த் வைத்தியநாதன்

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்றவர்

ரம்யா

ரம்யா

பழம்பெரும் நகைச்சுவை நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன் மற்றும் நடிப்பிசை புலவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர்களின் பேத்தி

செண்ட்ராயன்:

செண்ட்ராயன்:

காமெடி நடிகர்

ரித்விகா

ரித்விகா

'மெட்ராஸ்', 'கபாலி' படங்களின் மூலம் பிரபலமானவர்

மும்தாஜ்

மும்தாஜ்

'மல மல' என்ற பாடல் மூலம் இளைஞர்களிடையே பிரபலம் ஆனவர். டி.ராஜேந்தர் அறிமுகம் செய்த நடிகைகளில் ஒருவர்

தாடி பாலாஜி

தாடி பாலாஜி

காமெடி நடிகர் மற்றும் விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்

மமதி

 மமதி

டிவி தொடர் நடிகை மற்றும் பாடகி

நித்யா

நித்யா

தாடி பாலாஜியின் மனைவி

ஹாரிக் ஹாசன்

ஹாரிக் ஹாசன்

பழம்பெரும் நடிகை கமலா காமேஷின் பேரன் மற்றும் நடிகர் ரியாஸ்கான் - உமா ரியாஸ்கான் ஆகியோர்களின் மகன்

ஐஸ்வர்யா தத்தா

ஐஸ்வர்யா தத்தா

'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்' படத்தின் நாயகி.

 

இந்த பதினாறு போட்டியாளர்கள் தவிர நடிகை ஓவியாவும் நேற்று விருந்தினராக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளார். அவர் ஒருசில நாட்கள் மட்டும் பிக்பாஸ் வீட்டில் தங்கியிருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ்  2 நிகழ்ச்சி நேற்றுமுதல் தொடங்கியுள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த நிகழ்ச்சியில் நேற்று மொத்தம் 16 போட்டியாளர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.