close
Choose your channels
iruttu
Capmaari

கவிஞர் சினேகனுக்கு புதிய பதவி! கமல்ஹாசன் கொடுத்த ஆச்சரியம்

Saturday, November 2, 2019 • தமிழ் Comments

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழகம் மூலம் கட்டிப்பிடி வைத்தியர் என செல்லமாக அழைக்கப்பட்டு புகழ் பெற்றவர் கவிஞர் சினேகன். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் கமல்ஹாசனுடன் நெருக்கமானதை அடுத்து அவர் கட்சி ஆரம்பித்தவுடன் அக்கட்சியில் இணைந்து முக்கிய நிர்வாகியாகவும் உள்ளார். 

இந்த நிலையில் கவிஞர் சினேகனுக்கு புதிய பதவி ஒன்றை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அளித்துள்ளார். அவருக்கு கட்சியின் மாநில இளைஞர் அணி செயலாளர் என்ற பொறுப்பை அளித்துள்ளார். இந்த பதவி குறித்து கவிஞர் சினேகன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:

மாநில இளைஞர் அணி செயலாளர் என்ற பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டதாக நான் கருதவில்லை. மாற்றத்திற்கும் நாட்டின் ஏற்றத்திற்கும் தன்னை அர்ப்பணித்து கொள்ள காத்திருக்கும் ஒட்டு மொத்த இளைஞர்களுக்கும் வழங்கப்பட்டதாகவே கருதுகிறேன். வாருங்கள் தோழர்களே நம்மவர்களுக்காக நம்மவரோடு கரம் கோர்ப்போம்’ என்று கூறியுள்ளார். 

கவிஞர் சினேகன் மட்டுமின்றி மேலும் பல புதிய நிர்வாகிகள் பட்டியலை கமல்ஹாசன் அறிவித்ததுடன், 2021 ஆம் ஆண்டு‌ தமிழகத்தின்‌ அரசியலை மாற்றியமைக்கும்‌ லட்சிலத்தை, வலுப்படுத்த. கட்சி தொண்டர்களும்‌, என் அன்பிற்குரிய நற்பணி இயக்கத்தினரும்‌ தற்போது நியமிக்கப்படும்‌ பொறுப்பானர்களோடு இணைந்து செயல்பட்டு, மக்களுக்கான நல்லாட்சி கனவை நிறைவேற்றிட உழைக்கும்படி கேட்டுக்கொள்வதாகவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Get Breaking News Alerts From IndiaGlitz