close
Choose your channels
Por
Joshwa

கமல்-ஷங்கர் கொடுக்க போகும் டபுள் ட்ரீட்.. அதுவும் ஒரே வருடத்தில்.. ரசிகர்கள் குஷி..!

Friday, November 3, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி உள்ள ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் இன்று மாலை 5.30 மணிக்கு ’இந்தியன் 2’ படத்தின் வீடியோவை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ’இந்தியன் 2’ படத்தின் அடுத்த பாகமான ’இந்தியன் 3’ படமும் உருவாக இருப்பதாகவும் அதற்காக ஸ்பெஷல் கால்ஷீட் கமல் கொடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் ’இந்தியன் 2’ மற்றும் ’இந்தியன் 3’ ஆகிய இரண்டு படங்களுமே அடுத்த வருடம் வெளியிட ஷங்கர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது ’இந்தியன் 2’ திரைப்படத்தை ஏப்ரல் 12ஆம் தேதியும் ’இந்தியன் 3’ திரைப்படத்தை அடுத்த ஆண்டு தீபாவளி திருநாளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளகவும் செய்தி வெளியாகியுள்ளது.

'இந்தியன் 2’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்பிருக்கும் நிலையில் 'இந்தியன் 3’ படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தத்தில் ரசிகர்களுக்கு கமல் மற்றும் ஷங்கர் இணைந்து அடுத்த ஆண்டில் டபுள் ட்ரீட் கொடுக்க உள்ளனர் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.