close
Choose your channels
PKK

இனிய நண்பருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய கமல், ரஜினி!

Tuesday, March 1, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகிய இருவருக்கும் இனிய நண்பராக இருந்து வரும் நிலையில் முதல்வருக்கு தங்களது வாழ்த்துக்களை கமல், ரஜினி தெரிவித்துள்ளனர்.

இன்று தனது பிறந்தநாளை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள், தேசிய தலைவர்கள், தொழில் அதிபர்கள், திரை உலக பிரபலங்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் தமிழக முதல்வருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்

இதுகுறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: மனதிற்குகந்த நண்பர், தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் காண்கிறார். எதிர்ப்போர் கருத்துக்கும் இடமளித்து, தன் எண்ணத்துக்கும் செயலுக்கும் வலு கூட்டிச் செயல்படும் அவருக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்து. நீடு வாழ்க.

முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: இன்று பிறந்த நாள் காணும் இனிய நண்பர் மதிப்பிற்குரிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.