close
Choose your channels
Rajavamsam

தனுஷ்-செல்வராகவனின் 'நானே வருவேன்' படத்தின் சூப்பர் அப்டேட் கலைப்புலி எஸ்.தாணு!

Friday, October 15, 2021 • தமிழ் Comments

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் தற்போது மித்ரன் ஜவஹர் இயக்கும் ‘திருச்சிற்றம்பலம்’ மற்றும் கார்த்திக் நரேன் இயக்கும் ‘மாறன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படங்களின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் செல்வராகவன் இயக்கும் அடுத்த திரைப்படமான ’நானே வருவேன்’ என்ற திரைப்படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில் சற்று முன் ’நானே வருவேன்’ படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘நானே வருவேன்’ படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்று நாளை வெளியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து இந்த அப்டேட்டுக்காக தனுஷ் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

தனுஷ், செல்வராகவன், யுவன் சங்கர் ராஜா கூட்டணி மீண்டும் நீண்ட இடைவெளிக்கு பின் இணையவுள்ளதை அடுத்து இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz