close
Choose your channels

முதல்முறையாக வருங்கால கணவருடன் காஜல் அகர்வால்: வைரலாகும் புகைப்படம்!

Monday, October 26, 2020 • தமிழ் Comments

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான காஜல் அகர்வாலுக்கும் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் கௌதம் என்பவருக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது என்பது தெரிந்ததே. மேலும் இவர்களுடைய திருமணம் அக்டோபர் 30-ஆம் தேதி நடக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தற்போது திருமண வேலைகளை இரு வீட்டாரும் விறுவிறுப்பாக செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் காஜல் அகர்வால் தனது சமூக வலைத்தளத்தில் முதல் முதலாக கௌதம் உடன் இணைந்து இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். மேலும் அவர் அனைவருக்கும் தங்களுடைய தசரா வாழ்த்துக்கள் என்றும் கூறியுள்ளார்.

ஏற்கனவே திருமணத்திற்குப் பின்னர் கௌதம் உடன் தான் வாழவிருக்கும் வீட்டின் புகைப்படத்தை சமீபத்தில் பதிவு செய்தார் என்பதும் திருமண நிச்சயதார்த்த மோதிரத்துடன் கூடிய புகைப்படம் ஒன்றையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காஜல் அகர்வால் பதிவு செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் காஜல் அகர்வால், திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

View this post on Instagram

Happy Dussehra from us to you ! @kitchlug #kajgautkitched

A post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial) on

Get Breaking News Alerts From IndiaGlitz