close
Choose your channels

கருப்பு காஸ்ட்யூமில் கலக்கும் காஜல் அகர்வால்: புதிய போட்டோஷூட்

Wednesday, September 22, 2021 • தமிழ் Comments

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான காஜல் அகர்வால் சமிபத்தில் எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

திருமணத்திற்கு பின்னரும் காஜல்அகர்வால் அவ்வப்போது போட்டோஷூட் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருவார் என்பதும், இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் லைக்ஸ் குவியும் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் சமீபத்தில் காஜல் அகர்வால் எடுத்த போட்டோஷூட் புகைப்படத்தில் அவர் கொடுத்த கிளாமர் போஸ் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

கருப்பு காஸ்டியூமில் கலக்கலான கிளாமர் போஸ் கொடுத்த காஜல் அகர்வாலின் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ரசித்து கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் காஜல் அகர்வால் தற்போது கமல்ஹாசன் நடித்து வரும் ’இந்தியன் 2’ சிரஞ்சீவி நடித்து வரும் ’ஆச்சாரியா’ உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் சமீபத்தில் அவர் கர்ப்பமாக இருப்பதாகவும் அதனால் விரைந்து அவர் தான் ஒப்புக் கொண்ட படங்களை முடிக்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz