close
Choose your channels

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் பங்கஜ் த்ரிபாதியின் 'கடக் சிங்' டிரைலர்.. ZEE5 வெளியிட்டது..!

Tuesday, November 21, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியாவில் நடைபெறும் 54 வது சர்வதேச திரைப்பட பண்டிகையின் திறப்பு விழா நடைபெறும் கோவாவில் பங்கஜ் த்ரிபாதி நடிக்கும் ‘கடக் சிங்’ படத்தின் ட்ரெய்லரை ZEE5 வெளியிடுகிறது

இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் ப்ளாட்ஃபார்ம் மற்றும் பல மொழிகளில் கதை சொல்லும் ZEE5, கோவாவில் நடைபெறும் பெருமைமிக்க 54 வது சர்வதேச திரைப்பட விழா திறப்பு விழாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும், பங்கஜ் த்ரிபாதி நடிக்கும் ‘கடக் சிங்கின்’ ட்ரெய்லரை வெளியிட்டது.

இந்தியா முழுவதிலிருந்தும் வந்திருந்த அரசு அலுவலர்கள், பிரமுகர்கள், உச்ச நட்சத்திரங்கள் மற்றும் உலகெங்கிலும் இருந்து வந்திருந்த திரைப்பட வெறியர்கள் பங்கேற்ற மிகவும் மதிக்கப்படும் மற்றும் பெருமை மிக்க ஆசியாவின் திரைப்பட விழாக்களில் ஒன்றான இந்த நிகழ்வில், இந்த ட்ரெய்லர் ஆரவாரமான வரவேற்பை பெற்றது, இது திரைப்படத்தின் நம்பகத்தன்மையை மேலும் வலுப்படுத்தியது.

மேலும் முக்கிய விஷயம் என்னவென்றால், கடக் சிங் ஐஎஃப் எஃப்ஐ, கோவாவில் –ல் ‘காலா ப்ரீமியர்கள்’ பிரிவில் அதன் உலகளவிலான வெளியீட்டை தொடங்க உள்ளது மற்றும் முக்கிய நபர்கள் பங்கு பெறும் இந்த நிகழ்வில், மிகுந்த ஆர்வம் மற்றும் எதிர்பார்ப்பிற்கு இடையே அனைத்து நடிகர்கள் மற்றும் திரைப்பட குழுவினர் பங்கேற்க உள்ளனர். இந்த திரைப்படம் 8 டிசெம்பர் 2023 அன்று வெளியிடப்படவிருக்கிறது.

தேசிய விருது வென்ற இயக்குனர் அனிருத்தா ராய் சௌதிரி இயக்கிய ’கடக் சிங்’ திரைப்படத்தில் தேசிய விருது வென்ற பல நடிகர்கள் நடித்திருக்கின்றனர். பங்கஜ் த்ரிபாதி, பார்வதி திருவோது மற்றும் முன்னணி கதாபத்திரத்தில் சஞ்சனா சாங்கியுடன் பங்களாதேஷ் நடிகர், ஜெயா அஹ்சான் மற்றும் முக்கிய துணை பாத்திரங்களில் பரேஷ் பாஹூஜா மற்றும் வருண் புத்ததேவ் ஆகியோர் நடிக்கின்றனர். ஓபஸ் கம்யூனிகேஷனுடன் இணைந்து ஒரு விஸ் ஃபிலிம்ஸ் மற்றும் கேவிஎன் தயாரிப்பு, கடக் சிங். விஸ் ஃபிலிம்ஸ் (மற்றும் கேவிஎன் ஆகியோர்களால் தயாரிக்கப்படுகிறது மற்றும் இணைத் தயாரிப்பாளர்கள் ஷ்யாம் சுந்தர் மற்றும் இந்திராணி முக்கர்ஜி.

இந்த திரைப்படம், கடக் சிங் என்றழைக்கப்பட்ட ஏகே ஷ்ரிவாஸ்தவின் வாழ்க்கையை பின்தொடர்கிறது , இவர் நிதி சார்ந்த குற்றங்கள் துறையில் கூட்டு இயக்குனராக உள்ளார், தற்போது பிற்போக்கு மறதி நோயுடன் போராடி கொண்டிருக்கிறார். ஏகே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதுடன் திரைப்படம் தொடங்குகிறது மற்றும் அவருடைய கடந்த காலம் பற்றிய முரண்பாடான கதைகள் அவருக்கு சொல்லப்படுகிறது, கதையிலிருந்து உண்மையை பிரித்து சொல்ல அவர் வற்புறுத்தப்படுகிறார் . பாதி மறந்த நினைவுகளுக்கு இடையே, மர்மமான முறையில் ஒரு மருத்துவமனையில் சேர்ந்திருப்பதன் பின்னால் மற்றும் குறிப்பிடத்தக்க ஒரு நிதி சார்ந்த குற்றத்தின் பின்னால் உள்ள உண்மையைக் கண்டறிய அவர் மன உறுதியுடன் உள்ளார், இவை அனைத்தும் அவருடைய குடும்பம் பிரிவதிலிருந்து பாதுகாக்கும் போது நடைபெறுகிறது. இது ஒழுங்காக செயல்படாத ஒரு குடும்பம் மற்றும் உணர்வுகளின் ஏற்றத் தாழ்வுகளுக்கு வழிவகுக்கும் எதிர்பாராத தொடர் நிகழ்வுகளின் காரணமாக அவர்கள் ஒன்றிணையும் கதையும் கூட. இந்த திரைப்படம் வெவ்வேறு வடிவங்களில் உறவுகளின் முக்கியத்துத்தை மற்றும் இந்த உறவுகள் எப்படி வெவ்வேறு கண்ணோட்டங்களை அளிக்கிறது என்பதைக் காட்டுகிறது, இது கதை முன்னோக்கி நகர உதவுகிறது.

நடிகர் பங்கஜ் த்ரிபாதி கூறுகையில், “கடக் சிங் நான் முன்னதாக நடித்திருக்கும் வேறு எந்த கதையும் போல அல்லாதது. அவர் வழக்கத்திற்கு மாறான கதாபாத்திரம் மற்றும் அடுக்குகளை கொண்ட இத்தகைய ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. கூடுதலாக, டோனி டா, பார்வதி, ஜெயா மற்றும் இளமையான மற்றும் ஆர்வம் நிறைந்த சஞ்சனா போன்றவர்கள் உட்பட சில நம்பமுடியாத திறமைசாலிகளுடன் வேலை செய்ய முடிந்தது. அனைவரின் ஒன்றிணைந்த சக்தி மற்றும் பேரார்வம் உண்மையிலேயே இந்த திரைப்படத்தை பக்கங்களிலிருந்து ஸ்க்ரீனுக்கு மாற்றியது. மேலும், கடந்த இரவு ஐஎஃப்எஃப்ஐ –ல் ட்ரெய்லரை அறிமுகப்படுத்தியது மற்றும் முதன் முறையாக ட்ரெய்லருக்கான மக்களின் எதிர்வினையை பார்ப்பது மிகுந்த ஆர்வமளித்தது. இங்கே ஐஎஃப்எஃப்ஐ –ல் இந்த திரைப்படத்தையும் திரையிடுகிறோம், அதனால் திரைப்படமும் நல்ல வரவேற்பை பெறும் என்று ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்”.

நடிகர் பார்வதி கூறுகையில் “ திரைப்படம் தயாரிக்கும் அனுபவத்தின் ஒவ்வொரு அம்சமும் அடிக்கடி 10/10 மதிப்பெண் பெறுவது இல்லை. கடக் சிங் எனக்கு அந்த அரிதான நிகழ்வாக இருந்திருக்கிறது. டோனி தா வழிகாட்டுதலில் ஒரு கதாபாத்திரத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பு கிடைப்பதிலிருந்து மற்றும் பங்கஜ் ஜி போன்றவர்களுடன் ஸ்க்ரீன் இடத்தைப் பகிர்ந்து கொள்வது, சஞ்சனா சாங்கி, பாரேஷ் பஹூஜா மற்றும் ஜெயா அஹசானில் ஆபார திறமையைக் காண்பது மற்றும் செட்டில் ஒவ்வொரு துறை உறுப்பினரும் மிகச் சரியாக ஆதரவு அளிப்பது மற்றும் விராஃப் சர்காரி தலைமை வகித்த, ஊக்குவிக்கும் தயாரிப்பு அணி எங்களை இடைவிடாது ஊக்குவித்தது, இது உண்மையிலேயே அற்புதமானதாக இருந்தது. நாம் இப்போது வாழ்ந்து வரும் காலத்தில், நம்முடைய மனித தன்மையுடன் தொடர்பில் இருப்பதற்கு நமக்கு வழிகாட்டும் வகையில் திறமையாக கதை சொல்பவர்களுக்கான மிகுதியான தேவை நமக்கு உள்ளது. டோனி தா மற்றும் அணியினர் கடக் சிங்கில் எங்களுக்காக அந்த அனுபவத்தை உருவாக்கினர்”.

நடிகர் சஞ்சனா சாங்கி கூறுகையில், “முதன் முதலில் கடக் சிங் கதையை ரிதேஷ் ஷா சொன்ன சமயத்திலிருந்து, நாம் பிரத்யேகமான ஏதோ ஒன்றை செய்யப் போகிறோம் என்ற மிக உறுதியான உணர்வு எனக்கு ஏற்பட்டது. புத்திசாலித்தனத்துடன் அது எழுதப்பட்டிருக்கும் விதத்திற்கு, டோனி தா (அனிருத் ராய் சௌதிரி) மற்றும் விஸ் ஃபிலிம்ஸில் உள்ள அணியினர் அழகாக உயிரூட்டி இருக்கிறார்கள். எனக்கு உத்வேகம் அளிப்பவரான பங்கஜ் திரிபாதி எனக்கு அப்பாவாக நடிக்க அவருக்கு எதிராக, அடுக்குகளை கொண்ட மற்றும் சிக்கலான கதாபாத்திரமான சாக்ஷியை கொண்டு வருவதற்கான பொறுப்பு அளிக்கப்பட்டது , நடிப்பில் ஒரு முதுநிலை பட்டம் மற்றும் ஆய்வு பட்டம் பெற்றது போல இருந்திருக்கிறது. ட்ரெய்லரை ஐஎஃப்எஃப்ஐ கோவாவில் அறிமுகபடுத்துவது மற்றும் அதைத் தொடர்ந்து உலக அளவிலான முதல் காட்சியை வெளியிடுவதை விட பார்வையாளர்களுக்கு நம்முடைய திரைப்படத்தை கொண்டு வருவதற்கான சிறந்த வழியை என்னால் கற்பனை செய்ய முடியாது.”

நடிகர் ஜெயா கூறுகையில். “ இந்த திரைப்படம் மற்றும் நான் நடித்த கதாபாத்திரம் ஒரு நடிகையாக மிகவும் புதியதாக, புத்துணர்வு அளிப்பதாக இருந்தது மற்றும் உண்மையிலேயே எனக்கு ஒரு செழுமையான அனுபம். அணியினர் அனைவரும் மற்றும் உடன் வேலை செய்த குழுவினர் பிரத்யேகமாக பங்கஜ் ஜி நம்ப முடியாத திறமை கொண்டவராக இருந்தார், ஒரு இயக்குனராக, அனிருத்தா ராய் சௌத்ரி எப்போதுமே நான் உடன் பணியாற்ற விரும்பிய ஒருவர், அவருடன் இணைந்து ஒரு புதிய துறையில், வேறொரு மொழியில் அடியெடுத்து வைக்க முயற்சி செய்வது மிகவும் ஆர்வத்தை தூண்டுவதாக மற்றும் எனக்கு மிகவும் சவால் நிறைந்ததாகவும் இருந்தது. இந்த ஸ்க்ரிப்ட் மிகவும் ஈடுபடுத்துவதாக, மூழ்கடிப்பதாக இருந்தது மற்றும் இதற்கு முன் நான் பார்த்திராத ஒரு விஷயம், என்னுடைய வேலை அனைத்திலும் இது எப்போதுமே பிரத்யேகமான ஒரு இடத்தை பிடிக்கும் என நம்புகிறேன். ஷாந்தனு மொய்த்ராவின் இசை மிகவும் ஆன்மா நிறைநத்தாக இருந்தது, அவர் எப்படி எப்போதுமே அற்புதமாக திரைப்படங்களுக்கான இசையை அமைத்து இயக்குகிறார்! இது கணங்கள் மற்றும் செயல்திறனையும் மேம்படுத்துகிறது மற்றும் செட்டில் அவிக் முக்கோபபாத்யாயின் லைட்டிங், பொருட்களை நம்ப முடியாத அளவு அழகாக மற்றும் நிஜமாகவும் தோன்றச் செய்யும். இந்த அணி நபர்களுடன் வேலை செய்வதை நான் நேசித்தேன் மற்றும் இந்த படம் வெளிவர ஆவலுடன் காத்திருக்கிறேன்.

டிசம்பர் 8ஆம் தேதி முதல் ‘கடக் சிங்’ ZEE5-ல் வெளியாகும். இந்த படத்தின் டிரைலர் லிங்க் இதோ:

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.