close
Choose your channels
anabel
friendship

சால்ட் அண்ட் பெப்பர் ஹேர்ஸ்டைல் கெட்டப்பில் 'கபாலி' ரஜினி?

Saturday, August 22, 2015 • தமிழ் Comments

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள 'கபாலி' படத்தின் போட்டோஷூட் நேற்று ஏவிஎம் ஸ்டுடியோவில் தொடங்கியது. இந்த போட்டோஷூட்டில் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, கலையரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த போட்டோஷூட்டிற்கு பின்னர் ரஜினிகாந்த் மற்றும் ராதிகா ஆப்தேவின் கெட்டப் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது

(Fan made poster)

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த படத்தில் சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலில் வெள்ளை நிற தாடியுடன் நடிக்கவுள்ளார். போட்டோஷூட்டில் அவருக்கு சால்ட் அண்ட் பெப்பர் விக் பொருத்தப்பட்டு போட்டோஷூட் நடந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதே லுக்கில் அவர் பெண் குழந்தை ஒன்றை கையில் வைத்துள்ளதாக ஒரு போட்டோ எடுக்கப்பட்டதாகவும், அந்த சமயத்தில் அவர் தூய வெள்ளை நிற உடை அணிந்திருந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

அதேபோல் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் ராதிகா ஆப்தே இரண்டு மூக்குத்திகள் அணிந்து சேலையில் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 'தலைவரின் புதிய கெட்டப் உடன் விரைவில் வெளிவரவுள்ள 'கபாலி'யின் பர்ஸ்ட் லுக்கை எதிர்பார்த்து அவரது கோடானு கோடி ரசிகர்கள் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Get Breaking News Alerts From IndiaGlitz