close
Choose your channels

தியேட்டரை விட அதிக கட்டணமா? அதிர்ச்சியில் விஜய்சேதுபதி ரசிகர்கள்

Tuesday, September 22, 2020 • தமிழ் Comments

விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ’க/பெயர் ரணசிங்கம்’ என்ற திரைப்படம் வரும் அக்டோபர் 2ஆம் தேதி ஓடிடியில் ரிலீசாக உள்ளது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் புரமோஷன்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தின் சிங்கிள் பாடல்கள் ஒவ்வொன்றாக ரிலீஸ் ஆகி ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தை ஓடிடியில் பார்ப்பதற்கான கட்டணம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தை ஓடிடியில் ஒரே ஒருமுறை மட்டும் பார்ப்பதற்கு 199 ரூபாய் கட்டணம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தியேட்டரில் பெரிய ஸ்க்ரீனில் பார்த்தால் கூட 120 ரூபாய் கட்டணம் தான் என்ற நிலையில் ஓடிடியில் பார்ப்பதற்கு இவ்வளவு கட்டணமா? என ரசிகர்கள் புலம்ப ஆரம்பித்துள்ளனர்.

ஏசி, பெரிய திரை, சவுண்ட் எஃபெக்ட் உடன் பார்ப்பதற்கே ரூ.120 என்ற நிலையில் வீட்டில் ஓடிடியில் பார்க்க ரூ.199 என்பது மிக அதிகம் என்ற கருத்து விஜய்சேதுபதி ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி பொதுமக்கள் தரப்பில் இருந்து வெளிப்பட்டு வருகிறது.

Get Breaking News Alerts From IndiaGlitz