close
Choose your channels
iruttu
Capmaari

ஜோதிகா நடிக்கும் அடுத்த படத்தில் பிரபல ஹீரோ!

Monday, November 11, 2019 • தமிழ் Comments

நடிகை ஜோதிகா. நடிகை ரேவதியுடன் நடித்த ’ஜாக்பாட்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது அவர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தியுடன் ஒரு படத்திலும், ’பொன்மகள் வந்தாள்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்

இந்த நிலையில் இயக்குனர் ஆர்.சரவணன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஜோதிகா ஒப்பந்தம் ஆனார் என்பது குறித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். தற்போது இந்த படத்தில் ஜோதிகாவுடன் பிரபல ஹீரோ மற்றும் இயக்குநர் சசிகுமார் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இருவரும் ஒரே படத்தில் நடிப்பது இதுதான் முதல் முறை என்றாலும், இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடிக்கிறாரா என்பது குறித்து உறுதியான தகவல் இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் சூரி மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர். இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் படக்குழுவினரிடம் தகவல்கள் வெளிவந்துள்ளது

Get Breaking News Alerts From IndiaGlitz