close
Choose your channels

மணமகள் தோற்றத்திற்கு தயாராகும் ஜூவாலா கட்டா: வைரல் புகைப்படங்கள்!

Friday, March 26, 2021 • தமிழ் Comments

நடிகர் விஷ்ணு விஷால் சமீபத்தில் தனது சமூக வலைத்தளத்தில் தான் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவை காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்யப்போவதாகவும் அறிவித்திருந்தார். இதனை அடுத்து விஷ்ணு விஷால்-ஜுவாலா கட்டா திருமண தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்று செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் தற்போது மணமகள் தோற்றத்திற்கு ஜூவாலா கட்டா தயாராகிவரும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை பார்க்கும் போது இன்னும் ஓரிரு நாளில் விஷ்ணு விஷால்-ஜூவாலா கட்டா திருமணம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து விஷ்ணு விஷாலுக்கும், ஜுவாலா கட்டாவுக்கும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் விஷ்ணு விஷால் நடித்த ’காடன்’ திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது என்பதும் இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விஷ்ணுவிஷால் ஏற்கனவே ’ஜெகஜாலக்கில்லாடி’ ’எஃப்ஐஆர்’ மற்றும் ’மோகன்தாஸ்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படங்களும் அடுத்தடுத்து விரைவில் ரிலீஸாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Get Breaking News Alerts From IndiaGlitz