'நான் பார்த்த முதல் முகம் நீ': ஜான்வி கபூரின் நெகிழ்ச்சியான பதிவுக்கு குவியும் லைக்ஸ்!


Send us your feedback to audioarticles@vaarta.com


தல அஜித் நடிப்பில், எச் வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’வலிமை’ என்பதும் இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் பிரமாண்டமாக உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற அம்மா சென்டிமென்ட் பாடல் புரோமோ வீடியோ நேற்று வெளியானது என்பதும் இந்த பாடல் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தில் ’நான் பார்த்த முதல் முகம் நீ’ ’நான் கேட்ட முதல் குரல் நீ’ என்ற சித் ஸ்ரீராமின் மயக்கும் குரலில் உள்ள பாடல் அனைவரையும் கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த பாடலின் இந்த வரிகளை தமிழிலேயே குறிப்பிட்டு ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தனது சமூக வலைத்தளத்தில் தனது அம்மா ஸ்ரீதேவியின் புகைப்படத்தையும் பதிவு செய்து ‘அம்மா’ என குறிப்பிட்டுள்ளார். அம்மா சென்டிமென்ட் பாடலை தன்னுடைய சொந்த அம்மாவுடன் இணைத்து பதிவு செய்துள்ளது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக நெட்டிசன் கமென்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்த பதிவுக்கு போனிகபூர் உள்பட ஏராளமானவர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அம்மா சென்டிமென்ட் பாடல் ஜான்வி கபூரின் உண்மையான அம்மாவையே நினைக்க வைத்து விட்ட நிலையில் ரசிகர்களும் இதே நினைப்புடன் இந்த பாடலை பார்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த பாடல் படத்தில் இடம் பெறவில்லை என்றும் ஆல்பத்தில் மட்டுமே இடம்பெற்று உள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
நான் பார்த்த முதல் முகம் நீ
— Janhvi Kapoor (@janhvikapoorr) December 1, 2021
நான் கேட்ட முதல் குரல் நீ
அம்மா…❤️ #Valimai #AjithKumar #ValimaiPongal pic.twitter.com/EvCVJNY0S7
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments