close
Choose your channels
DJ
DJ

'தப்பை தட்டிக்கேட்டா அதுக்கு பெயர் ரெளடித்தனமா? 'ரத்த சாட்சி' டிரைலர்

Monday, December 5, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் கதையில் உருவான ’ரத்த சாட்சி’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே கடந்த மாதம் இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த டிரைலரும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. பரம்பரை பரம்பரையாக அடிமையாக வைக்கப்பட்டிருந்த தொழிலாளிகள் பொங்கி எழுந்து முதலாளியின் கொடுமையை எதிர்ப்பது தான் இந்த படத்தின் கதை என்பது இந்த ட்ரெய்லரில் இருந்து தெரிய வருகிறது.

மேலும் இந்த டிரைலரில் உள்ள ஒவ்வொரு வசனமும் புரட்சிகரமாக இருப்பதால் இந்த படம் நிச்சயம் வெற்றி படமாக உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கண்ணா ரவி, இளங்கோ குமரவேல், ஹரிஷ் குமார், கல்யாண் மாஸ்டர் உள்பட பலரது நடிப்பில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தை ரஃபிக் இஸ்மாயில் என்பவர் இயக்கி உள்ளார். ஜாவித் ரியாஸ் இசையில் உருவான இந்த படம் விரைவில் ஆஹா ஓடிடியில் நேரடியாக ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.