close
Choose your channels
naaney_varuven
Ponniyin_Selvan

ஜெயம் ரவி மகனின் இன்ப அதிர்ச்சி: வைரல் வீடியோ

Thursday, August 11, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவியின் மகன் தனது பிறந்தநாளின் போது கிடைத்த இன்ப அதிர்ச்சியின் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் ஜெயம் ரவி கடந்த 2009ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். 2010ஆம் ஆண்டு அவருக்கு ஆரவ் என்ற மகனும் 2014ஆம் ஆண்டு அயன் என்ற மகனும் பிறந்தனர்

இந்த நிலையில் அயன் தனது பிறந்த நாளை நேற்று கொண்டாடியுள்ளார். துபாயில் தங்களது மகனின் பிறந்தநாளை கொண்டாட ஜெயம் ரவி -ஆர்த்தி தம்பதியினர் சென்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

நடிகர் ஜெயம் ரவியின் மகன் துபாயில் உள்ள ஒரு ஐஸ்க்ரீம் கடையில் ஐஸ்க்ரீம் வாங்கியபோது, ஐஸ்கிரீம் கடைக்காரர் காட்டிய வித்தை அவருக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. இதுகுறித்த வீடியோவை ஆர்த்தி தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த பதிவு வைரலாகி வருகிறது.

இதனை அடுத்து தனது மகனின் பிறந்த நாள் குறித்து ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி பதிவு செய்தபோது, ’உங்கள் குழந்தைகளின் கனவுகளை நிறைவேற்றுவதும், அவர்களுடன் நினைவுகளை உருவாக்குவதும் ஒரு வித்தியாசமான விஷயம்... தொற்றுநோய் அவர்களின் கனவுகளை சில வருடங்கள் தாமதப்படுத்தியிருக்கலாம், ஆனால் இப்போது நாம் மகிழ்ச்சியான தருணத்தில் வாழ்கிறோம். மேலும் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியையும் நல்ல ஆரோக்கியத்துடன் அனுபவிக்க இந்த பிறந்த நாளில் வாழ்த்துகிறோம், கடவுள் உன்னை ஆசிர்வதிக்கட்டும்’ என்று பதிவு செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.