close
Choose your channels
anabel
friendship

ஜெயம் ரவி குடும்பத்தில் இருந்து திரைக்கு வரும் இன்னொரு நபர்

Thursday, November 10, 2016 • தமிழ் Comments

ஜெயம் ரவி நடிகராகவும், அவருடைய சகோதரர் ஜெயம் ராஜா நடிகர் மற்றும் இயக்குனராகவும், ஜெயம் ரவியின் தந்தை மோகன் எடிட்டராகவும் திரையுலகில் ஜொலித்து வரும் நிலையில் இவருடைய குடும்பத்தில் இருந்து தற்போது இன்னொரு நபர் திரையுலகில் காலடி எடுத்து வைத்துள்ளார். அவர்தான் ஜெயம் ரவியின் மகன் ஆரவ்
ஆம், ஜெயம் ரவியின் மகன் ஆரவ் அவர் நடிக்கவுள்ள 'டிக் டிக் டிக்' என்ற படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. படத்திலும் ஆரவ், ஜெயம் ரவியின் மகனாக நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
சக்தி செளந்திரராஜன் இயக்கவுள்ள 'டிக் டிக் டிக்' திரைப்படத்தில் ஜெயம் ரவியுடன், நிவேதா, ரமேஷ் திலக் உள்பட பலர் நடிக்கவுள்ளனர். நேமிசந்த் ஜெபக் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கவுள்ளார்.

Get Breaking News Alerts From IndiaGlitz